தத்திந்தோம் அத்திந்தோம் டூன்சாமி தித்திந்தோம்
தமிழ்மேல கருத்துப்படம் போட வந்தனுங்க.
காயிதத்துல வரையிற மாதிரி கம்பூட்டர்ல வர்லிங்க. அத்தால தொட்டு கொஞ்சம் வெட்டு கொஞ்சம் ஒட்டுண்டு புச்சா தர்றனுங்க நம்ப தோஸ்த் விகடகவி அண்ணாத்தே அதுமேல பாட்டுக்கட்டி ஆடுவாருங்க. பாக்க பொம்பளையாட்டம் இருக்காரேண்டு பாக்கியளா? பொம்பள வேசமும் நல்லாப் போடுவாருங்க. நம்ப சிவாசி, எம்சியாரெல்லாம் கூட ஆதில பொட்டச்சியா ஆக்ட் குடுத்தவங்க தானுங்களே?
பாருங்க பாருங்க பாத்துக்கிட்டே இருங்க
போடுங்க போடுங்க வோட்டுப் போடுங்க
கமண்டு எதுனாச்சும் தட்டி வுடுங்க
மங்களம் மங்களம்
சபைக்கு மங்களம்
டூன்சாமி...
1:13:00 am
--
vv said...
டூன்சாமி சொன்னத கேட்டீகளா?
தெனாலி பரம்பரைங்க நம்முது. (உடனே தெனாலி என்ன ஜாதின்னு தேடாதீங்க. குருசிஷ்ய பரம்பரையச் சொன்னேங்க) ஏதோ விடுவிடுண்ணு விடுவன்க. அத்த எடுத்துக்கிறதும் வீசிக்கிறதும் உங்க இஸ்டமுங்க. கீசிப்புடாம இருந்தாச்சரி.
புடிச்சிருந்தா + குத்துங்க.
புடிக்கிலியா ஓடிப்போயிடுங்க.
பொம்பள வேசம் நம்முது இல்லீங்க. எங்கியொ சுட்டது. நம்ப கிடங்குமேல கெடந்துதுங்க. தூசிதட்டிப் பாத்தாக்கா சோக்காகீது. அத்தையே நம்ப அடையாளமா போட்டனுங்க. ஒரிசினலு பார்ட்டி அடிக்க வர்ற வரைக்கும் அதாங்க நம்ப ஐடெண்டிபிகேசன்.
வர்ட்டா?
விகடகவி.
vv said...
தமிழ்மணத்துல மறுமொழி காணமே